காணப்படுகின்றது. மன்னரோடொப்பச் செல்வம் திரட்டிய வணிக மன்னர் இப்பட்டினங்களில் வேயாமாடங்கள் அல்லது காரை வீடுகள் கட்டி இன்பவாழ்வு வாழ்ந்தனர். பல நாடு கண்ட வணிக அறிஞர், 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற பெருமித உணர்வுடன் வாழ்ந்தனர். | தமிழில் நகர் அல்லது மருதநிலப் பேரூரில் வளர்ந்த பண்பாடே நாகரிகம் எனப்பட்டது. ஆயினும் நகரநாகரிகம் தாண்டிப் பட்டின நாகரிகம் நாடு கடந்த உலகப் பண்பாக வளர்ந்தது. தமிழர் நாகரிகத்துக்கு அடிப்படையான பண்பு இவ்வுலகப் பண்பேயாகும். | கற்காலம் | உலக முழுவதும் நாகரிகம் ஒரே சமகால வளர்ச்சியாக வளரவுமில்லை. ஒரே தொடர்ந்த வளர்ச்சியாக அமையவுமில்லை. உலக நாகரிகத் தொடர்பற்ற ஒதுக்கிடங்களில் - பொதுவாக மலைக்குடியினரிடையிலும், சிறப்பாக வடதுருவப் பகுதியிலும், ஆப்பிரிக்க ஆஸ்திரேலியப் பகுதிகளிலும் - குகை மனித நாகரிகம், கற்கால நாகரிகம் ஆகிய நிலைகளிலுள்ள மக்கள் இன்றும் வாழ்கின்றனர். வரலாற்றிலும் தென் ஐரோப்பா, நடுஉலகு, தென்னாடு ஆகிய இடங்களில் நாகரிகம் சிறந்திருந்த காலங்களில், வடஐரோப்பாவும் வடஉலகும் நாடோடி மக்களின் வேட்டைக் காடுகளாயிருந்தன. கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் இந்நாடோடி மக்கள் நாகரிக உலகின்மீது பரந்து தாக்கினர், பண்டைய நாகரிக ஒளி மங்கி மறுகிற்று. கி.பி.5-ம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரையுள்ள இக்காலத்தை நாம் இடை இருள் காலம் என்கிறோம். | சென்ற ஐந்நூறு ஆண்டுகளுக்குள் உலகில் - சிறப்பாக மேனாட்டில் - நாகரிகம் மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. இடைக்கால இருள் கடந்து பழங்கால நாகரிக ஒளியின் ஊற்றைத் தற்காலத்துக்குக் கொண்டுவரப் பாலமாயிருந்த | | |
|
|