கடப்பையிலும் கர்னூலிலும் உள்ள பழங் கற்காலக் கருவிகள் அவ்விடத்திலுள்ள பாறை வகைகளிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளன. | தென்னாட்டில் பழங்கற் காலத்திலிருந்து புதுக் கற்கால நாகரிகமும், புதுக் கற்காலத்திலிருந்து செம்பு, வெண்கல, இரும்புக்கால நாகரிகங்களும் உலகின் மற்றப் பகுதிகளைத் தாண்டி மிக விரைந்து வளர்ந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஏனென்றால் பழங்கற்காலக் கருவிகளையடுத்துப் புதுக் கற்காலக் கருவிகள் அகப்படுகின்றன. அத்துடன் புதுக் கற்காலக் கருவிகளுடனே, ஆனால் அரும் பொருள்களாக, செம்பு வெண்கலக் கருவிகளும் பொன், வெள்ளி அணிகலன்களும், சில சில இடங்களில் இரும்புக் கருவிகளும்கூடக் கிடைக்கின்றன. புதுக் கற்காலத்திலேயே இவ்வுலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டும், இவை போதிய அளவில் நாகரிக உலகெங்கும் கிடைக்கவில்லை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. | தவிர, புதுக் கற்காலத்திலேயே, கல்லால் செய்த நெசவுக் கருவிகளை நாம் தமிழகத்தில் கண்டெடுத்திருக்கிறோம். நாகரிக மனித உலகின் கனவுக் கெட்டாத இத்தொல் பழம் பண்டைக் காலத்திலேயே, தமிழர் பருத்தியின் பயன் அறிந்து, பஞ்செடுத்து, நூல்நூற்று, நெய்யக் கற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை இதனால் அறிகிறோம். இது வியப்பினும் வியப்பேயாகும்! ஐரோப்பியர் பஞ்சை அறிவதற்குக் குறைந்தது பதினாயிரம் ஆண்டு கட்குமுன்னே தமிழர் அதை அறிந்து பயன்படுத்தி இருந்தனர். | பழங்கற்காலத்தில் மனிதன் உயிர்நீத்த தன் இனத்தவர் உடல் பற்றிக் கவலை கொள்ளவில்லை. கற்களைச் செப்பம் - செய்யும் அறிவு அவனுக்கு இன உணர்வையும் இனப்பற்றையும் உண்டு பண்ணியிருந்தது. ஆகவே அவன் இறந்த உடலைப் புதைத்து, அக்குழியை நாய்நரிகள் கிளறாமலிருப்பதற்காக, அதன்மீது | | |
|
|