கற்குவியல்களைக் குவித்து வைத்தான். சில இடங்களில் கும்பிடு வடிவிலும் தலைகவிழ் பகரவடிவிலும் 1கல் தாங்கிகள் அமைத்தான். ஆனால் தமிழ் நாட்டில் அவன் இவற்றுடன் அமையவில்லை. உடலை அவன் 2புதை தாழிகளில் அடக்கம் செய்தான். | பழங் கற்காலத்திலேயே மனிதன் தீக்கல்லைக் கண்டு, தீ உண்டு பண்ணக் கற்றிருக்க வேண்டும். பின்னாட்களில் தீயுமிழ் மரங்கண்டு தீக்கடைகோலும் வழங்கியிருக்கலாம். இவற்றின் மூலம் அவன் சமைத்துண்டதுடன், தனக்கு வேண்டிய பாண்டங்களையும் களிமண்ணால் செய்யக் கற்றிருக்கவேண்டும். புதுக் கற்காலத்தில் தென்னாட்டினர் செய்த அழகிய கலை வேலைப்பாடமைந்த மட்பாண்டங்களையும், மரச்சீப்பு, எலும்பு ஊசி முதலிய கருவிகளையும் நாம் புதை தாழிகளிலும், அவற்றினருகிலும் காண்கிறோம். | தாழிகளுடன் கோலாப்பூரிலும் மிஸ்ரப்பூரிலும் கண்டெடுக் கப்பட்ட மட்பாண்டங்கள் மிக உயர்ந்த கலைப் பண்பாடு உடையவை, சென்னை, மைசூர், ஹைதராபாத், பம்பாய் ஆகிய இடங்களில் இரும்பு கருவிகள் கூட அகப்படுகின்றன. மிகப் பழமை வாய்ந்த, முக்கியத்துவம் பொருந்திய ஈமத் தாழிகள் பல்லாவரம், செங்கற்பட்டு, நெல்லூர், ஆர்க்காடு, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் மிகப் பெரிய அளவில் காணப்படுகின்றன. புதுக்கோட்டை இத்தகைய பொருள்களுக்கு ஒரு காட்சிக் கூடமாகவே விளங்குகின்றது. | புதுக்கற்காலத் தென்னாட்டு நாகரிகம் சிந்து கங்கை வெளி எங்கும் பரந்து, சிந்துவெளி நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்புகளும் ஒப்புமைகளும் உடையதாயிருந்தது. | கோயமுத்தூர் மாவட்டத்தில் செட்டிப் பாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆட்டு வடிவமுடைய மூடி வாய்ந்த |
| 1. Dolmens, Cromlechs. 2. Urns. | | |
|
|