பக்கம் எண் :

29

 
கோப்பை, பாரசீகத்தில் பலூசிஸ்தானில் கண்டெடுக்கப் பட்டவற்றுக்கு இனமாயிருக்கிறது.
பல்லாவரத்தில் மணல் கலந்த களிமண்ணால் செய்யப்பெற்ற குறுங்கால் மனித உருவம்,
ஈராக் நாட்டிலுள்ள பாக்தாது நகரிலும் அகப்பட்டுள்ளது. மதுரையில் கிடைத்துள்ள
சுவத்திகா வடிவப் பொருள்களும், குறுங்கால் பாண்டங்களும் மேலை ஆசியாவிலுள்ள
திராய் நகரில் கண்டெடுக்கப்பட்டவற்றை ஒத்திருக்கின்றன. சேலத்திலுள்ள குடிசை
வடிவத் தாழிகள் கூர்ச்சரத்திலும் உள்ளன.
 
     சேலத்தில் கிடைத்த மட்பாண்டங்கள் அழகிய சிவப்பு வண்ணத்தில் ஒரு
மங்கையின் வடிவம் தீட்டப்பட்டுள்ளன. அவள் கூந்தல் பின்னிச் சுருள்களாகத்
தொங்கவிடப்பட்டிருக்கிறது. சுருள்களை இறுகப் பற்றி நிறுத்தும்படி சுருள் ஊசிகள்
குத்திவைக்கப்பட்டிருக்கின்றன. குண்டுக் கல்லில் மரச்சீப்பும், கிருஷ்ணாவில் சித்திரம்
தீட்டப்பட்ட குதிரும், களிமண் காப்பும், கர்னூலில் தாயத்துக்களும், ஹைதராபாத்தில்
களிமண் நாகங்களும் உள்ளன. மைசூரில் கல்லாலான தாழிகளும், வழிபாட்டு
மண்டபமும், கடப்பை, பெல்லாரி, அனந்தப்பூர் மாவட்டங்களில் கல்லுளி, சுத்தி
ஆகியவையும் அகப்படுகின்றன. புதுக் கோட்டையில் ஒரு புறம் இரும்புக் கருவிகளும்
மறுபுறம் எலும்பும் உள்ளஇரு சிறைத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
சிந்துவெளி நாகரிகம்
 
     தென்னாட்டு நாகரிகத்தின் பழமைக்கு ஓர் அளவு கோலாகவும் அதன்
பெருமைக்கும் ஓர் உரைகல்லாகவும் சிந்து வெளி நாகரிகம் திகழ்கிறது.
 
கிழக்குப் பஞ்சாபில் ஹரப்பாவில் 1920 முதலும், சிந்து மாகாணத்தில்
மொகஞ்சதரோவில் 1922 முதலும் புதையுண்ட இரண்டு பழைய நகரங்கள் அகழ்ந்து
காணப்பட்டன. மொகஞ்சதரோவில் நகரங்களை மூடியிருந்த மண் மேட்டினுச்சியில் ஒரு
புத்த தூபி நிற்கின்றது. இதன் பாழடைந்த அடித் தளங்களில்