பக்கம் எண் :

3

 
ஒரே நிலம்
 
     தென்னாடு உலகின் பழம்பெரு நாடுகளில் ஒன்று என்பதுமட்டும் அன்று: அது
இயற்கையன்னையின் முதல் மாநிலக் கன்னியாகவும் இருந்தது, இமயம் உண்டாவதற்கு
நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பும், சிந்து கங்கை ஆறுகளும் அவற்றின்
சமவெளிகளும் தோன்றுவதற்குப் பன்னூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும்
தென்னாடு ஒரு முழு மாநிலமாகவே இருந்தது.
 
     இமயமலையின் சரிவுகளிலும், உச்சிகளிலும் புதையுண்ட மீன் எலும்பு, சங்குசிப்பி,
உறைந்த கடற்பாசி ஆகியவற்றின் சின்னங்கள் இன்றுங் காணப்படுகின்றன. இதனால்
அம்மலை ஒரு சமயம் மிகப்பெரிய கடலின் அடிநிலமாய் இருந்து, உள்நிலக்
கிளர்ச்சியால் மேல் எழுந்து மலையாயிற்று என்பது தெரிகிறது. கடல், மலையான பிறகு,
அதிலிருந்து கானாறுகளாய் எழுந்த கங்கை, சிந்து பிரமபுத்திரா ஆகிய
நீரோட்டங்களால் அடித்துக்கொண்டு வரப்பட்ட வண்டல் மண், மாகடலைப் பின்னும்
தூர்த்து, சிந்து கங்கை சமவெளியைத் தோற்றுவித்தது. இம்மாறுதலால் தென்னாட்டுடன்
இச்சமவெளிகள் தொடர்பு பெற்றன. தென்னாட்டோடு இச்சமவெளிகளையும் சேர்த்து
இந்தியா என்று நில இயலார் இன்று வழங்குகின்றனர்.
 
     தென்னாட்டின் தென்பாலுள்ள மாகடலில் பல தீவுகள் இருக்கின்றன. இப்
பெருங்கடல் முன்பு தென்னாட்டின் தொடர்ச்சியான ஒரு மாபெருங் கண்டமாயிருந்தது.
தென் ஆப்பிரிக்கா, பர்மா, மலாயா, கிழக்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா,
வடமேற்கு அமெரிக்கா ஆகிய நிலப் பகுதிகள் இக்கண்டத்துடன் முன்பு ஒட்டிக்
கிடந்து, பின் பிளவுபட்டுச் சிதறிப் போயின என்று மண்ணூலார் குறிக்கின்றனர்.
 
     இம்மாபெரு நிலப்பகுதியைத் தமிழ்மரபு குமரிக்கண்டம் என்று வழங்குகின்றது.
ஆராய்ச்சியாளர் இதனை ''இலெமூரியா''