பக்கம் எண் :

4

 
என்று குறிக்கின்றனர். உயிரினங்கள் முதன் முதல் இங்கேயே தோன்றின. மனித
இனத்துக்கும் அதனை அடுத்த உயிரினமாகிய குரங்கு இனத்துக்கும் பொது மூல
இனமான 'இலெமு' இம் மாநிலத்தின் சிதறிய பகுதிகளிலேயே வாழ்ந்திருந்ததாகத்
தெரிகிறது.
 
     மனித இனம் இங்கே தோன்றிய பின்னரே, இமயமலையும் சிந்து கங்கை
சமவெளியும் தோன்றின. அவற்றின் வழியாக மனித இனம் உலகின் வடபகுதியிலும்
பரந்தது. பழைய நடுமா கடலின் எஞ்சிய ஒரு பகுதியே இன்று ஐரோப்பாவுக்கும்
ஆப்பிரிக்காவுக்கும் இடையேயுள்ள குறுகிய *'நடுநிலக்கடல்' ஆகும். சகாரா, அராபியர்,
இராஜபுதனம் ஆகிய பாலைவனங்கள் பழைய நடுப்பெருங்கடலில் நீர்வற்றிய மணற்
பரப்புகளேயாகும். அக்கடலின் உப்பு நீர் இராஜபுதனத்தில் இடைக்காலத்தில் உப்பு
ஏரியாய் இருந்து, இப்போது உப்புப் பாறைகளாக உறைந்து கிடக்கின்றது.
 
     தென்னாட்டின் அடிநிலம் பெரும்பாலும் நெருப்புப் பாறையாகவே இருக்கிறது. நில
உலகம் ஒரே நெருப்புப் பிழம்பாயிருந்து புறத்தோடு கெட்டியான காலத்திய பாறை இது.
அக்கால எரிமலைகள் கக்கிய அடிநிலக் குழம்புகளும் இதே அழற்பாறைகளே.
 
     தென்னாட்டிலும் மற்ற இலெமூரியாக் கண்டப் பகுதிகளிலும் நாம் ஒரே வகைப்
பாறைகளையும், ஒரேவகை உயிர்செடி இனச் சின்னங்களையும் காண்கிறோம்.
 
காவிய ஏடு
 
     தென்னாடு, நிலஉலக வளர்ச்சி, உயிரின வளர்ச்சி, மனித இனவளர்ச்சி ஆகிய
இயற்கையின் பல படிமுறை வளர்ச்சிகளைப்
 

* Mediterranean Sea