பக்கம் எண் :

39
 
     கொத்துவேலை, மட்பாண்டவேலை, தச்சு, கல்தச்சு, பொற்கொல்லர் வேலை,
கன்னாரவேலை, இரத்தினத்தொழில், செதுக்குக் கலை, சங்குத்தொழில், மீன்பிடித்தல்,
வண்டிஓட்டல், தோட்டி வேலை, காவல் தொழில், கப்பல் தொழில், (நெல், கோதுமை,
வால்கோதுமை, எள், பருத்தி, ஆகியவற்றின்) பயிர்த்தொழில், தந்த வேலை, பாய்
முடைதல், வாணிகம், சிற்பம், ஓவியம் ஆகியவை சிந்துவெளி மக்கள் ஈடுபட்ட
தொழில்கள் ஆகும். ஓவியம், இசை, நடனம் ஆகிய கலைகளையும், கணிதம்,
மருத்துவம், வானநூல் ஆகிய இயல்களையும் அவர்கள் தேர்ந்து வைத்திருந்தனர்.
மிருதங்கம் நடனப் பெண் ஆகிய ஒவியங்கள் கலைகளுக்குச் சான்று. நிறைகற்கள்
கணக்கறிவை உணர்த்துகின்றன. வீடு கட்டுவதில் அவர்கள் இராசி அறிவைக்
காட்டியிருந்தனர். கல்வமொன்றில் மீந்துள்ள சிலாசத்து அவர்கள் மருத்துவப்
பயிற்சிக்குச் சான்று ஆகும்.
 
     தமிழ் ஆண்டைப்போலச் சிந்துவெளி மக்கள் ஆண்டு தை மாதத்திலேயே
தொடங்கிற்று. சுமேரியருக்கு இராசிகள் பத்தாயிருக்க சிந்துவெளி மக்களுக்கு
எட்டேயிருந்தன. இதனால் சிந்து வெளி நாகரிகத்தின் பழமை கி.மு.5610 வரை
எட்டுவதாகத் தெரிகிறது. இது சுமேரிய நாகரிகம் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ஆகும். மனித நாகரிகத்தின் பிறப்பிடமும், வளர்ப்புப்
பண்ணையும் எகிப்தோ, பாபிலோனோ அல்ல, சிந்துவெளியும் தென்னாடுமே என்பதை
இது அறுதியிட்டுக் காட்டுகின்றது.
 
     சிந்துவெளி நாகரிகம் வேத ஆரிய நாகரிகத்துடன் தொடர்பற்றது. மேலும் அது
வேதநாகரிகத்துக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதே சமயம்
அது திராவிட நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. உண்மையில் ஆரியர் சிந்து
கங்கை வெளியில் நுழையுமுன் இருந்த திராவிட நாகரிகம் அதுவே என்று துணியலாம்.
ஏனெனில் ஹரப்பா மொகஞ்சதரோ ஆகிய இரண்டு நகரங்களும் இயற்கையாய்
அழிந்தவையாகத் தோற்ற