தொகை 49. பாடும் பெருமைசான்ற 3 பாண்டியர் உட்பட, பாடிய புலவர் தொகை 449. தலைசிறந்த புலவர்கள் சிறுமேதாவியார். சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங் குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகியவர்கள். | பாடப்பட்ட நூல்கள் நெடுந்தொகை நானூறு; குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, நூற்றைம்பதுகலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன. | புராண மரபும் தமிழ் மரபும் | இந்த இரண்டு மரபுரைகளும் புராண மரபுரைகள் அல்ல. ஆனாலும் அவற்றில் புராணமணம் வீசாமலில்லை. தெய்வங்கள் புலவருடன் வந்து இடம் பெறுகின்றனர். ஆண்டுகள் ஆயிரப் பதினாயிரக் கணக்கில் காட்சியளிக்கின்றன. | ஆனால் இவற்றைப் பொய் என முற்றிலும் விலக்கிவிடவும் முடியவில்லை. அவற்றில் போதிய உண்மைகள் இருக்கின்றன என்பதைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரநூல் மரபு, உரைமரபு முதலியவை வலியுறுத்துகின்றன. | சங்க இலக்கியம் என்ற பெயரில் இன்று நம்மிடையே இருக்கும் இலக்கியம் கடைச்சங்க இலக்கியம். மரபுரையில் குறிப்பிட்ட நூல்களின் விவரங்களுடன் அது பெரும்பாலும் ஒத்துள்ளது. தொல்காப்பியம் இடைச்சங்கம் அல்லது முதல் சங்கத்துக்கு உரியது. | முச்சங்க மரபின் பெரும் பகுதி உண்மை என்பதை இவை காட்டுகின்றன. | தவிர, சங்க இலக்கியத்துக்கு முற்பட்ட முத்தமிழ் மரபைச் சிலப்பதிகாரமும் அதன் உரையும் மறுக்கமாட்டாத நிலையில் | | |
|
|