நமக்கு விளக்குகின்றன. இயல், இசை, நாடகம் என்ற மூவகைத் தமிழில், சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் தெரிவிப்பது இயல் ஒன்றையே, சிலப்பதிகாரம் தெரிவிக்கும் இசை, நாடகம் ஆகியவற்றின் இலக்கண இலக்கியங்கள் அவற்றுக்கு முற்பட்டனவாதல் வேண்டும் என்பது தெளிவு. | உலக இலக்கிய கலை ஆராய்ச்சிகள் சிலப்பதிகாரம் தரும் விளக்கொளிக்கு இன்னும் வலிமை தருகின்றன. ஏனென்றால் சிலப்பதிகாரத்தால் நாம் அறியும் தமிழ்நாடக மரபுடன், மலையாள நாட்டு நாடக மரபு, சமஸ்கிருத நாடகமரபு, தென்கிழக்காசிய மரபு, கிரேக்க உரோம மரபுகள் ஆங்கிலேய நாட்டு மரபு, பண்டை அமெரிக்க 'மய' நாகரிக மரபு ஆகியவை தொடர்புடையவை. | கடல்கொண்ட தமிழ் மரபைச் சங்கநூற் பாட்டுக்கள் மெய்ப்பிக்கின்றன. தற்கால மண்நூல் நில நூலாராய்ச்சிகளும் பிறநாட்டு மரபுகளும் இதனுடன் பெரிதும் பொருந்துகின்றன. | இவற்றுடன் சிந்துவெளி ஆராய்ச்சி தமிழின் பழமைக்கும் தமிழினத்தின் பெருமைக்கும் புதிய சான்றுகள் தரத் தொடங்கி யுள்ளது. | தமிழகத்தில் மூவேந்தர்கள் மட்டுமல்ல. வேறு பல சிற்றரசர்களும் இருந்தனர் என்று தமிழ் இலக்கியத்தால் அறிகிறோம். இவர்கள் வேளிர் அல்லது குறுநில மன்னர்கள் எனப்பட்டார்கள். மூவேந்தர்கள் முடிஉடைய அரசர்கள். வேளிருக்கு முடி கிடையாது. ஆகவே அவர்கள் குடி அரசர்கள் என்று குறிக்கப் படுகிறார்கள். | தமிழகத்துக்கு அப்பால் ஆந்திர தெலுங்குப் பகுதியில் இத்தகைய குடி அரசர் இருந்தனர். தமிழக எல்லையில் இவர்கள் திரையர், பல்லவர், குறுபர் என்றும், அதற்கப்பால், சளுக்கர், கடம்பர் என்றும் அழைக்கப்பட்டனர். | | |
|
|