'குடம்' அல்லது 'குளம்' அதாவது 'சருக்கரை' யிலிருந்தும் பிறந்த சொற்களேயாகும். | தென்னாட்டுக்குத் 'தமிழகம்' என்ற பெயரும் 'திராவிடம்' என்னும் பெயரும் பண்டைக் காலத்திலிருந்தே வழங்கியிருந்தன என்று அறிகிறோம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே 'வெள்ளைத் தீவு' (மங்களூர்) முதல் மரக்காணம் (சதுரங்கப் பட்டினம்) வரையுள்ள கடற்கரைப் பகுதியைக் கிரேக்கர் தமிரிகா அல்லது தமிழகம் என்று அழைத்தனர். கி.பி.மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே முற்றுவிக்கப்பட்ட சமஸ்கிருத புராணங்கள் இப்பகுதியைத் திராவிடம் என்று கூறின. இதனைத் தமிழகம் என்பதன் சிதைவு என்று சிலரும் 'திருஇடம்' என்பதன் 'மரூஉ' என்று சிலரும் எண்ணுகின்றனர். ஸ்பெயின் நாட்டிலும் பண்டைய ஃபிரான்சு, பிரிட்டன் நாடுகளிலும் இருந்த 'துருயித இனத்தவருடன்' தென்னாட்டவர் கொண்டிருந்த தொடர்பை இச்சொல் காட்டுகிறது எனக்கொள்வர் 'திருத்தந்தை ஹீராஸ்ட் என்ற அறிஞர். | நாட்டின் எல்லை | தென்னாடு இயற்கையெல்லைகளையுடைய மாநிலம். அது தெற்கு நோக்கிய முனையுடைய ஒரு முக்கோண வடிவில் அமைந்திருக்கிறது. வடக்கே விந்தியமலை அதன் நில எல்லையாகவும், நில அரணாகவும் இருக்கிறது. அதனை அடுத்துள்ள மேட்டு நிலம் காடுகளும், அதற்கு இப்பாலுள்ள சாத்பூரா மலையும், நருமதை, தபதி ஆறுகளும் விந்தியமலை யரணுக்கு அரண் செய்பவை ஆகின்றன. முக்கோணத்தின் மேற்கிலும் கிழக்கிலும் அரபிக்கடல் வங்க விரிகுடா ஆகியவையும், தென்முனையாகிய குமரியின் தெற்கே இந்துமா கடல் என்று வழங்கும் குமரி மாகடலும் நீரரண்களாய் உதவுகின்றன. | | |
|
|