பக்கம் எண் :

69
 
மரபினரே என்றும், கடப்பை கர்னூல் மாவட்டங்களிலுள்ள அண்டிரா மலையையும்
அண்டிரா ஆற்றையும் சார்ந்தவர்களே என்றும் அறிகிறோம்.
 
     ஆந்திர அரசுக்கு வடமேற்கிலுள்ள கலிங்க அரசில் கி.மு. 170 முதல் கி.மு. 159
கடந்து காரவேலன் என்ற புகழ்மிக்க பேரரசன் ஆண்டான். அவன் சமண மதத்தைச்
சார்ந்தவன். அதைப் பரப்புவதில் அவன் ஓர் இள அசோகனாக விளங்கினான். அவன்
தென்னாட்டின் வட பகுதியை வென்றதுடன், கி.மு. 163-ல் மகத நாட்டையும் வென்று
பேரரசனாக விளங்கினான்.
 
     காரவேலன் காலத்தில் ஹத்திகும்பக் கல்வெட்டு தமிழக மூவரசுகளின் ஒற்றுமை
பற்றியும் வலிமை பற்றியும் குறிப்பிடுகிறது. 113 ஆண்டுகளாகக் கலிங்கப் பேரரசு
விரிவடையவொட்டாமல் தமிழரசர்களின் கூட்டுறவு தடுத்து நிறுத்தியதாக அது
தெரிவிக்கிறது. வடதிசையில் வெற்றி கண்ட காரவேலன் படைகள் தெற்கே இத்தமிழ்ப்
படையால் மீட்டும் மீட்டும் தோல்விகள் கண்டன.
 
     காரவேலனாட்சியால் ஆந்திரர் வளர்ச்சி சிறிதே தடைப்பட்டிருந்தது. அவனுக்குப்
பின் தென்னாட்டின் கீழ்கடல் வரையும் மேல்கடல் வரையும் அவர்கள் ஆட்சி பரந்தது.
கி..மு.26-ல் ஆந்திரப் பேரரசன் முதலாம் புளுமாயி, மகதத்தை ஆண்ட
கடைசிக்கண்ணுவ அரசனை வீழ்த்தி இமயம்வரை தன் பேரரசைப் பரப்பினான்.
 
     சிந்துவெளிக்கு அப்பாலிருந்து வந்த சகர் தென்னாட்டின் வடக்கெல்லையில்
ஆண்டனர். அவர்கள் சகப் பேரரசரின் கீழ் சத்திரபர் அல்லது மாகாண
ஆட்சியாளராயிருந்து பின் தனி யரசராயினர். அவர்களுடன் ஆந்திரர் போராட
வேண்டி வந்தது.
 
     ஆந்திப் பேரரசருள் புகழ்மிக்கவன் கி.பி.113 முதல் கி.பி. 138 வரை ஆண்ட
கௌதமிபுத்ர சதகர்ணி ஆவன். இவன் சத்திரபன்