பக்கம் எண் :

72
 
பல்லவப் பாண்டியப் பேரரசுகள் 

(கி.பி.3-9 நூற்றாண்டுகள்)
 

     தென்னாட்டின் வரலாற்றில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு ஒரு முனைப்பான திரும்பு
கட்டம் ஆகும். நாகரிகம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் அது மிகப் பெரிய
மாறுபாடுகளை உண்டுபண்ணிற்று.
 
     இம்மாறுபாடுகளின் மூலகாரணத்தை நாம் முற்றிலும் தென்னாட்டிலேயே
காணமுடியாது. அவற்றைத் தென்னாட்டின் வடக்கிலுள்ள சிந்து கங்கை சமவெளியிலும்,
அதற்கு அப்பாலுள்ள நடு ஆசியப் பகுதியிலுமே சென்று காண்டல் வேண்டும்.
 
களப்பிரர் படையெழுச்சி
 
     கி.மு.1500வரை சிந்து கங்கை வெளி தென்னாட்டு நாகரிகத்தின் ஓர்புறச் சிறை
வாரமாகவே இருந்து வந்தது. ஆனால் ஆரியர் குடியெழுச்சிக்கால முதல் ஆயிர
ஆண்டுகளாக அயலார் படையெடுப்பாலும் அயலார் கலப்பாலும் சிந்து வெளி
பேரளவிலும் கங்கை வெளி ஓரளவிலும் சின்னாபின்ன மடைந்தே வந்தன. கி.மு.2-ம்
நூற்றாண்டிலிருந்து மீண்டும் பேரளவில் பண்படா முரட்டு மக்கள் இனங்கள்
புடைபெயரத் தொடங்கின. மங்கோலியர், யூச்சி என்ற இனத்தவரை வடக்கிலிருந்து
நெருக்க, அவர்கள் ஊணரையும், ஊணர் குஷாணரையும், குஷாணர் சகரையும் முறையே
தெற்கு நோக்கி நெருக்கித் தள்ளினார்.
 
     ஆந்திரப் பேரரசர் குஷாணரையும் சகரையும் கிழக்கே கங்கை வெளியிலும்
தெற்கே தென்னாட்டிலும் பரவாமல் தடுக்கப்