கலியின் புரளி என்று குறிப்பிட்டது போல, வடபுலத்திலும் சகர், ஊணர் படையெடுப்புக்களே கலியுகத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இக்காலத்தில் எழுதித் தொடுக்கப்பட்ட பழங்கதைகளுடன் அக்கால வரலாறும் எதிர்கால உரையாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டது. எதிர்காலக் கற்பனைகள் மூன்றாம் நூற்றாண்டுடன் முடிவதிலிருந்து, அவற்றின் காலம் அந்நூற்றாண்டே என்பது தெற்றென விளங்குகிறது. இப்புராணங்களுடன் கலந்து பல அயலவர் சமய சமூகக் கோட்பாடுகள் தென்னாட்டு வாழ்வில் புகுந்து தென்னாட்டினர் சமூக அமைதியையும் குலைக்கத் தொடங்கின. | மூன்றாம் நூற்றாண்டின் மக்கட் புடைபெயர்ச்சி சிந்துவெளியை நிலையாகவும், தென்னாட்டின் மேற்குப் பகுதியைத் தற்காலிகமாகவும் தாக்கிற்று. அதே சமயம் அது கங்கை வெளியைத் தற்காலிகமாகவும் தென்னாட்டின் கீழ்ப்பகுதியை நிலையாகவும் தாக்காது விட்டிருந்தது. இதன் பயனாகக் கங்கை வெளியில் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை குப்தப் பேரரசும், ஹர்ஷன் பேரரசும் நிலவ முடிந்தது. அதன்பின் சிந்துவெளியின் குழப்பம் கங்கை வெளியிலும் படர்ந்தது. ஆனால் தென்னாட்டில் ஆந்திரப் பேரரசும் சரிந்துவிட்டாலும் வேறு பல அரசுகள் புதிதாக ஏழ இடமிருந்தது. | தமிழகத்திலேயே அத்தகைய புதிய அரசு ஒன்று ஏற்பட்டது. அதுவே காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவ அரசு. அது தமிழகத்தின் வடபகுதியைக் கைக்கொண்டு தமிழகம் தாண்டி விரைந்து வளரலாயிற்று. | பல்லவ மரபு | பல்லவர் பிறப்பைப்பற்றி வரலாற்றாசிரியர் பல கூறி மயங்குவதுண்டு. குடியெழுந்துவந்த வடபுலமாக்களுள், சகர், | | |
|
|