கரையிலும் உள்ள மக்கள் கடலோடிகளாய் இருந்ததனால், அவர்களுக்குத் திரையர் என்று பெயர் வழங்கப்பட்டிருந்தது. தொண்டைமான்கள், குறும்பர், சளுக்கர், பல்லவர், ஆந்திரர் ஆகியவர் இத்திரையர் மரபினரே என்று கூறத்தகும். | குமரிமுனை தென்னாட்டின் கரை மையமாகவும் குமரி மாகடலின் தலை மையமாகவும் அமைந்துள்ளது. தென்னாடும் கடலுலகின் மைய இடத்தில் நில உலகின் நடுநாயக நாடாக அமைந்திருக்கிறது. இதனைச் சூழக் கடலகத்தில் திட்டுக்களும் தீவுகளும் உள்ளன. தென்னாட்டினரைப் பண்டை நாளிலிருந்தே நாகரிக உலகத்தின் கடலோடிகளாகவும், கடல் வாணிகராகவும் ஆக்கியது இவ்வமைப்பே. தென்னாட்டுப் பேரரசர் பலர் கடல் கடந்த நாடுகளில் - சிறப்பாகக் குமரிக் கண்டப் பகுதிகளில் - தம் பேரரசைப் பரப்பினர். வாணிகமும், குடியேற்றங்களும் மிகுந்தன. தென்னாட்டுப் பேரரசுகள் இங்ஙனம் கடற்பேரரசுகளாய் இருந்ததனாலேயே, அவர்களிடம் வலிமை வாய்ந்த கடற்படைகள் இருந்தன. | தென்னாட்டின் மேல்கடற்கரை 1280 கி.மீ. நீளமும், கீழ்க் கடற்கரை 1760 கி.மீ. நீளமும் உடையது. எனவே இந்நாட்டின் மொத்தக் கடற்கரை நீளம் 3040 கி.மீ., அதாவது கிட்டத்தட்ட 3200 கி.மீ. ஆகும். இதில் கீழ்க்கரையில் விசாகப்பட்டினம், மசூலிப் பட்டினம், காக்கினாடா, சதுரங்கப்பட்டினம், சென்னைப் பட்டினம், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய துறைமுகப் பட்டினங்களும், மேற்குக்கரையில் குளைச்சல், ஆலப்புழை, கொச்சி, கள்ளிக்கோட்டை, மங்களூர், கோவா முதலிய துறைமுகப்பட்டினங்களும் உள்ளன. பம்பாய், சூரத் ஆகிய துறைமுகங்களும், நில இயல் முறைப்படி தென்னாட்டைச் சேர்ந்தவையே. பண்டைக் காலத்தில் கலிங்கப்பட்டினம், மரக்காணம், மல்லை (மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரம்) புகார் (காவிரிப்பூம்பட்டினம்), சோழன் தொண்டி, பெருந்துறை, | | |
|
|