கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக மேலைச் சாளுக்கியர் ஆண்ட பகுதியை இராஷ்டிரகூடரே ஆண்டனர். கி.பி.973-ல் தைலப்பன் என்ற மூன்றாம் தைலப்பன் இராஷ்டிர கூடரை முறியடித்து மீண்டும் சாளுக்கிய அரசை நிலை நாட்டினான். |
தைலப்பன் காலமுதல், முதலாம் சோமேசுவரன் (1042-1068) காலம்வரை ஐந்து அரசர் ஆட்சிகளில் மேலைச் சாளுக்கியருக்கும் சோழருக்கும் கடும் போராட்டம் நிகழ்ந்தது. 1052-ல் கொப்பம் போரிலும் கூடல்சங்கம் போரிலும் இருதிறத்தவரும் வெற்றி நமதே என்று கூறினும், மேலைச்சாளுக்கியரே அவற்றின் வலிமை பெருக்கினர். கடைசி இரண்டரசருள் முதல்வனை பெர்மாடி இரண்டாம் ஐகதேக மல்லன் மைசூரில் எழுந்த புதிய ஹோய்சள மரபினரை வென்றான். ஆனால் பிந்திய அரசன் மூன்றாம் தைலப்பன் (1151-1156) அமைச்சனான பிஜ்ஜளகளசூரி அரசனைக் கொன்று களசூரி மரபை நிறுவினான். |
கீழைச் சாளுக்கியர் |
முற்காலச் சாளுக்கியரில் கடைசி அரசனான இரண்டாம் புலிகேசி, பல்லவர், கீழ்க்கங்கர் ஆகியவரிடமிருந்து கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுவெளியிலுள்ள வேங்கை நாட்டைக் கைக்கொண்டிருந்தான். அவற்றை அவன்கீழ் ஆண்டஅவன் தம்பி குப்ஜவிஷ்ணுவர்த்தனன் புலிகேசிக்குப்பின் தன்னாண்மை பெற்றுக் கீழைச்சாளுக்கிய மரபை நிறுவினான். அவன் கி.பி. 615 முதல் 633வரை ஆட்சி செய்தான். |
இரண்டாம் விஜயாதித்தியன் (799-743) பெரும் போர்வீரன், கங்கர்கள், இரட்டர்கள் ஆகியவர்களை எதிர்த்துப் பன்னிரண்டரை ஆண்டுக் காலத்துக்குள் அவன் 108-ப் போர்களில் ஈடுபட்டான். |
விமலாதித்தியன் (1011-1022) முதலாம் இராசராச சோழன் புதல்வியான குந்தவையை மணந்துகொண்டான். இது முதல் ஒவ்வொரு தலைமுறையிலும் சோழர் கீழைச் சாளுக்கியர் மணஉறவால், மிகுதி மரபுக்கலப்பு உடையவராயினர். இதன் |