பக்கம் எண் :

     93
 
சமணசமயம் கன்னட நாட்டில் தொடக்க கால இலக்கியத்தையும் தமிழகத்தில் சங்க
காலத்துக்குப் பிற்பட்ட இலக்கியத்தையும் பெரிதும் ஊக்கிற்று.
 
     சங்க காலத்துக்குப் பின் தமிழகத்தில் புத்த, சமண சமயங்களின் தூண்டுதலாலும்,
இவற்றை எதிர்த்து மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே எழுந்த சைவ, வைணவ பக்தி ஞான
இயக்கங்களாலும் புத்திலக்கியம் பெருகிற்று. பழைய சங்க இலக்கியப் பண்பும் உயர்
கலைப் பண்பும் மரபற்று நலிந்தனவாயினும், பல புதுப் பண்புகள் தோன்றின.
 
சமயம்
 
     பாண்டிய பல்லவப் பேரரசுகளின் ஊழியில் தென்னாட்டின் பண்டை
நாகரிகவாழ்வில் பெருத்த மாறுதல்கள் ஏற்பட்டன. அதன் தொடக்கத்தில் எங்கும் புத்த
சமண சமயங்களே பரவி மேம்பட்டிருந்தன. பாண்டியர், பல்லவர், சாளுக்கியர், ஆகிய
அனைவரும் சமணராகவே இருந்தனர். சங்க காலந்தொட்டு கி.பி.6-ம் நூற்றாண்டு வரை
தமிழ் இலக்கியத்திலும் ஒரு பெரும்பகுதி புத்த சமண இலக்கியமாகவே இருந்தது.
சூளாமணி, குண்டலகேசி, யசோதர காவியம் ஆகிய புத்த சமண காப்பியங்களும்;
சிந்தாமணி என்ற சமண சமயப் பெருங்காப்பியமும் இக்கால நிலைக்குச் சான்றுகள்
ஆகும். இவை இக்காலத் தொடக்கத்துக்குரியவை என்று சிலரும், இதனையடுத்த 9-10ம்
நூற்றாண்டுக்குரியவை என்று சிலரும் கொள்கின்றனர்.
 
     இக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே தமிழகத்தில் புத்த சமண சமயங்களை
எதிர்த்துச் சைவ வைணவ சமயங்கள் தலைதூக்கின. இவை பக்தி இயக்கங்களாக
வளர்ந்து. கி.பி.6-7ம் நூற்றாண்டுகளில் முழு மறுமலர்ச்சியடைந்தன. 8 முதல் 10 அல்லது
12ம் நூற்றாண்டுகள் வரை அதன் முதிர்ச்சியால் நீலகண்டர், சங்கரர், இராமானுசர்
போன்ற புதிய சமய அறிவு ஆராய்ச்சியாளர்