தோன்றி சமஸ்கிருத மூலம் இன்றைய இந்திய சமய அடிப்படை கோலினர். | சைவ பக்தி இயக்கத்தை வளர்த்த நாயன்மார்களாலும், வைணவ பக்தி இயக்கத்தை வளர்த்த ஆழ்வார்களாலும், தமிழ் இலக்கியத்தை சங்க காலத்தில் தளர்வற்று நலிந்த இசை இலக்கியம் புதிதாக வளர்ந்தது. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருநாலாயிரம் ஆகியவை இவற்றின் பயனாகவே எழுந்தன. நீலகண்டர், சங்கரர், இராமானுசர் ஆகிய சமஸ்கிருத வாணர்களுக்கு வழி வகுத்தவர்கள் இவர்களே. கன்னட நாட்டில் இராமானுசரைப் பின்பற்றி 14-ம் நூற்றாண்டில் மத்வாசாரியரும், அவரைப் பின்பற்றி 16-ம் நூற்றாண்டில் வங்க நாட்டில் சைதன்னியரும் தோன்றினர். | பல்லவர்களில் பிற்காலத்தவர் சமஸ்கிருதத்தைப் பெரிதும் வளர்த்தனர். பாளி பிராகிருத மொழிகள் நலிவுற்றபின் பிற்கால புத்த சமயத் தலைவர்களின் முயற்சியால் கி.பி. 4-ம் நூற்றாண்டிலிருந்து புதிதாக சமஸ்கிருத மென் இலக்கிய மொழி தோன்றி வளரத் தொடங்கிற்று. இதைத் தமிழுடன் போட்டியிடத்தக்க ஓர் இலக்கிய மொழி ஆக்கியவர், தென்னாட்டில் பல்லவரும் கங்கை நாட்டில் குப்தரும், ஹர்ஷரும் பிற்கால இராஜபுத்திர அரசருமேயாவர். அத்துடன் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இருந்த புத்த சமண இலக்கியங்களையும் மக்கட் பழங்கதைகளையும் முதலில் சைவ, வைணவச் சார்பாகவும் பின் புதிய சுமார்த்த அல்லது பிராமண சமயச் சார்பாகவும் திரித்துப் புராண இதிகாசங்களாக்கினர். புத்த சமண மதங்கள் நலிவுற்ற பின் இவையே பழைய இலக்கியங்களாக நடமாடின. | சோழர் பேரரசாட்சியுடன் தென்னாடும் கீழ் நாடும் ஒரு புதிய ஊழியில் புகுந்தனவாதலால் அதன் வரலாற்றை அடுத்த பிரிவில் ஆராய்வோம். | | |
|
|