பக்கம் எண் :

95
 
சோழ பாண்டியப் பேரரசுகள் 

(9-14 நூற்றாண்டுகள்)
 

     பாண்டிய பல்லவப் பேரரசர் ஆட்சிக்குப்பின் தென்னாட்டில் அடுத்த
ஐந்நூறாண்டு வரலாறு பெரிதும் இரண்டு பேரரசுகளின் வரலாறாகவே இயங்குகிறது.
அவை சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு ஆகியவைகளே.
 
     சோழப் பேரரசு 10 முதல் 12-ம் நூற்றாண்டுகள் வரையிலும், பாண்டியப் பேரரசு
12, 13-ம் நூற்றாண்டுகளிலும், தழைத்திருந்தன. இவற்றின் காலத்திலும் நிலவினவாயினும்,
அவற்றின் வாழ்வு தாழ்வுகள் பெரிதும் இப்பேரரசுகளின் வாழ்வு தாழ்வுகளைச்
சார்ந்தவையாகவே இருந்தன.
 
     தென்னாட்டில் தொடக்கக்கால முதலே பல பேரரசுகள் இருந்தன.
அவற்றினிடையே கடல் கடந்த பேரரசுகளும், தென்னாடு கடந்த நிலப் பேரரசுகளும்
கூட உண்டு. ஆனால் நாம் பேரளவில் சோழப் பேரரசையே தென்னாட்டின் முதல்
தேசீயப் பேரரசு என்று கூறலாம். ஏனெனில் பழைய பேரரசரைப் போல சோழப்
பேரரசர் அயலரசர்களைக் கீழ்ப்படுத்தித் திறை கொள்வதுடன் அமையவில்லை. கூடிய
மட்டும் படிப்படியாகத் தம் நேரடியாட்சியையும், ஆட்சி முறையையும் பரப்பினர்.
நிலையான நிலப்படை, கடற்படைகளின் மூலமாக, வலிமை வாய்ந்த நடுவாட்சியை
ஏற்படுத்தவும் முயன்றனர். இவற்றால் பண்பாடு, இனம், கலை, இயல் ஆகியவற்றால்
ஏற்பட்ட நாட்டொற்றுமை இன்னும் உறுதி அடைந்தது.
 
     வடமேற்குப் பகுதி நீங்கலாகத் தென்னாடு முழுவதிலும், அதற்கப்பாலும் சோழப்
பேரரசு பரந்திருந்தது. இலங்கை, அந்தமான், நக்காவரம், மலாயா, கிழக்கிந்தியத் தீவுகள்
ஆகிய