பக்கம் எண் :

வ - று. இன்ன ரெனவேண்டா வென்னோ டெதிர்சீறி
முன்னர் வருக முரணகலும்-மன்னர்
1பருந்தார் படையமருட் பல்லார் புகழ
விருந்தா யடைகுறுவார் விண்.

(இ - ள்.) இன்னதன்மையாரென்று சொல்லவேண்டா; என்னுடனே கோபித்துஎன்முன்னே பொரவருக மாறுபாட்டினை மிகுக்கும் வேந்தர்; பருந்துநிறையும் தானைப்போரிடத்துப் பலரும்போற்ற வீரசுவர்க்கத்திற்குப் புதியராய் அதனிற் கிட்டுதலைப் பெறுவார்கள் எ - று.

(12)

248. முதுமொழி வஞ்சி

தொன்மரபின் வாட்குடியின்
முன்னோனது நிலைகிளந்தன்று.

(இ - ள்.) பழையவரலாற்றினையுடைத்தாய வாளினையுடைய மறக்குடியில் 6தமப்பனுடைய நிலைமையைச் சொல்லியது எ - று.

வ - று.3குளிறு முரசங் குணில்பாயக் கூடார்
ஒளிறுவாள் வெள்ள முழக்கிக்- களிறெறிந்து
புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய்
தண்ணடை நல்கல் தகும்.

(இ - ள்.) முழங்கும் வீரமுரசிலே கடிப்புத்தாக்கப் பகைவருடைய விட்டுவிளங்கும் வாள்வெள்ளத்தைத் துகைத்து யானையை வெட்டிப் புண்ணுடனே வந்தொழிந்தவனுடைய மகனுக்கு, பொலிந்த வீரக்கழலினையுடையோய், மருதநிலங்களைக் கொடுத்தல் தக்கதாம்.

மகனென்றமையால் அவன் தமப்பன் பட்டமை விளங்கும். எ - று.

(13)

49. 4உழபுல வஞ்சி

நேராதார் வளநாட்டைக்
கூரெரி கொளீஇயன்று.

(இ - ள்.) பொருந்தாதாருடைய நல்ல தேசத்தை மிக்க நெருப்பைக் கொளுத்தியது எ - று.

வ - று.5அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி
மயிலன்னார் மன்றம் படரக்-குயிலகவ
ஆடிரிய வண்டிமிருஞ் செம்ம லடையார்நாட்
டோடெரியுள் வைகின வூர்.

(இ - ள்.) வேலையொத்த விழியைப்புதைத்துப் பயப்பட்டுக் கூப்பிட்டு மயிலையொத்த குலமகளிர் மன்றென்று பாராதேசெல்ல, குயில்பாட,


1. புறநா. 179:11, 269: 11-2. 2. தொல். புறத். சூ .7, இளம். 3. நன்.சூ . 458, மயிலை.மேற். 4. எரிபரந்தெடுத்தல். 5. கள. 29. (பி-ம்.) 6. 'தனப்பனுடைய'