பக்கம் எண் :

ஆளுலாவச் சுரும்பு ஒலிக்கும் தலைமையினையுடைய பகைவர் தேசத்து ஊர்கள் பரந்தோடும் நெருப்பினுள்ளே அவதரித்தன எ - று.

(14)

50. மழபுல வஞ்சி

கூடார்முனை கொள்ளைசாற்றி
வீடறக்கவர்ந்த வினை மொழிந்தன்று.

(இ - ள்.) பகைவர் வேற்றுப்புலத்தைக் கொள்ளையூட்டி அகங்கள் பாழ்படக் கொள்ளைகொண்ட தொழிலைச் சொல்லியது எ - று.

வ - று. களமர் கதிர்மணி காலேகஞ் செம்பொன்
வளமனை பாழாக வாரிக்-கொளன்மலிந்து
கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்
நண்ணார் கிளையலற நாடு.

(இ - ள்.) அடியாரையும் ஒளிவிடும் வயிர அரதனங்களையும்1முத்து அரதனத்தினையும் சிவந்த பொன்னினையும் அழகிய அகங்களெல்லாம் வறியவாகத் திரட்டிக் கைப்பற்றிக்கொள்ளும் வகைமிக்குக் கண்ணுக்கு நிறைந்த வில்லாளர் கொள்ளைகொண்டார், வீரக்கழலினையுடைய அரசன்றன்பகைவர் சுற்றமிரங்க அவருடைய நாட்டை எ - று.

நாடு கண்ணார் சிலையார் கவர்ந்தாரென்க.

(15)

51. கொடை வஞ்சி

நீடவுங் குறுகவு நிவப்பவுந் தூக்கிப்
பாடிய புலவர்க்குப் பரிசினீட் டின்று.

(இ - ள்.) உச்சமாகவும் மந்தமாகவும் அதன்மேற் சமமாகவும் இசையையளந்து பாடின அறிஞர்க்குப் பரிசிலைக்கொடுத்தது எ - று.

செந்தூக்கு முதலான எழுவகைத் தூக்கினாலும் தூக்கியென்றுமாம்.ஈண்டு நிவப்பவென்றது மந்தத்திலே ஓங்கியசமத்தை; 2"ஒருசீர் செந்தூக் கிருசீர் மதலை, முச்சீர் துணிபு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர்கழாஅல், எழுசீர் தானெடுந் தூக்கென மொழிப" என்றாராகலின்.

வ - று. சுற்றிய சுற்ற முடன்மயங்கித் தம்வயி
றெற்றி மடவா ரிரிந்தோட-முற்றிக்
குரிசி லடையாரைக் கொண்டகூட் டெல்லாம்
பரிசின் முகந்தன பாண்.

(இ - ள்.) சூழ்ந்த பெருங்கிளை ஒக்கக் கலங்கித் தத்தம் வயிற்றிலே அடித்துக்கொண்டு மகளிர் கெட்டோடப் பகைவர் நாட்டை வளைத்துத் தலைவன் சத்துருக்களைப் பறித்துக்கொண்ட பொருண்முழுதும் தாம்பெறும் பேறாக முகந்துகொண்டன பாண்கிளை எ - று.

(16)


1. சிலப். 3 : 16; 14 : 150 ,அடியார். மேற். 2. சிறுபாண். 24 7-8: மதுரைக். 145-6; மலைபடு. 71-2; பதிற். 2-ஆம். பத்.பதி; 44 ;3-4
2. (பி-ம்.) 4. 'முத்திறத்தினையும்', 'முத்தினையும்' 3-4.