பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

அமலை M. ama. = படைமறவர் திரண்டு ஆரவாரித்தாடும்

ஆட்டம், ஆரவாரம். அமளி = ஆரவாரம்.

அம் = [1] நிலத்தொடு பொருந்தும் நீர்.

“அந்தாழ் சடையார்”         (வெங்கைக்கோவை, 35)

“செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே” (குறுந். 40)

என்னுங் குறுந்தொகையடிகளை நோக்குக.

அம் - ஆம் = நீர்.

“ஆமிழி யணிமலை” (கலித். 48)

“பூமரு தேன்பட்டுப் புனுகுசவ் வா(து) _ ஆம் அழன்மற்று” (நீதிவெண்பா)

அம் - அம்பு = நீர். அம்பு - ambu (S.). அம் - அப் (s), M. ambu.

அம் = [2] அழகு.

“கிஞ்சுகவா யஞ்சுகமே”     (திருவாச. 19:5)

அம் - அம்மை = 1. அழகு (பிங்.).

ஆம் = அழகு.

“ஆம்பாற் குடவர் மகளோ”     (சீவக. 492)

நீரால் வளம் ஏற்படுவதால் அழகு தோன்றும்.

ஒ.நோ : கார் = நீர், அழகு.

அமரல் = 2. பொலிவு (திவா.).

அமர்தல் = 3. அன்புகூர்தல்.

உளத்தாற் பொருந்துதல், காதலித்தல், விரும்புதல்.

“அமர்தல் மேவல்”         (தொல். 863)

“அகனமர்ந் தீதலி னன்றே”     (குறள். 92)

“ஆத்தி சூடி யமர்ந்த தேவனை”     (ஆத்திசூடி, கட. வா.)

C/f. L. amare, love, E. amateur, amatory, amiable, amorist, amorous, amour, paramour etc.

அம்முதல் = உ. கூடுதல், குவிதல்

அம் - அம்பு - அம்பல் = குவிந்த மொட்டு.

சிலரறிந்து கூறும் புறங்கூற்று.