பக்கம் எண் :

97

செப்பல் = செப்பலி = செந்நிறமுள்ள கடல்மீன் வகை.

செம் - செவ். செஞ்செவ்வே - செஞ்செவே = 1. நேராக. “செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும்’’ (கம்பரா. பூக்கொய். 7). 2. எளிதாக. “செஞ்செவே படர்வரென் படைஞர்’’ (கம்பரா. வருணனை. 13). 3. முழுதும். “செஞ்செவே யாண்டாய் சிவபுரத்தரசே’’ (திருவாச. 28 :6).

. செஞ்செம்மே.

செஞ்செவே - செஞ்ச = 1. நேராக. “செஞ்ச நிற்போரைத் தெரிசிக்க’’ (திருமந். 2079). 2. முழுதும்.

செவ் - செவ்வல் = 1. செந்நிறம் “செவ்வலங் குன்றம்’’ (களவழி. 10). 2. செம்மண் நிலம்.

செவ்வன் - செவ்வையாக. “செவ்வ னிறைகாக்கு மிவ் வுலகில்’’ (பு. வெ. 10, முல்லைப். 9).

செவ்வன் - செவ்வனம் = செவ்வையாக. “செவ்வனஞ் செல்லுஞ் செம்மைதானிலள்’’ (மணிமே. 3 :81).

செவ் - செவ்வி = 1. தகுந்த சமயம். “கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி’’ (குறள். 130). 2. காட்சி. “செவ்வியுங் கொடாஅன் இவ்வியல் புரிந்தனன்’’ (பெருங். 2 9 198). 3. பேரரும்பு (பிங்.). 4. விளைச்சற் பருவம். “முதிர்ந்த செவ்வித் தினையினை’’ (கந்தபு. வள்ளி. 158). 5. புதுமை. “காயாமலருஞ் செவ்விப்பூப் போல’’ (பு. வெ. 9 4, உரை). 6. அழகு. “வண்டுறை கமலச்செவ்வி வாண்முகம் பொலிய’’ (கம்பரா. சூர்ப்ப. 2). 7. சுவை. “பாற்சோற்றின் செவ்வி கொளறேற்றா’’ (நாலடி. 322). 8. மணம். “நாவிய செவ்வி நாற’’ (கம்பரா. கார்கால. 35). 9. தன்மை. 10. செம்மை. “செவ்வியிற் றொடர்ந்த வல்ல செப்பலை’’ (கம்பரா. இரா. வதை. 210).

செவ்வு = 1. செம்மை. 2. நேர்மை. “ஆருயிர் செவ்விராது’’ (கம்பரா. காட்சி. 29). 3. நேர் (திசை). இந்தச் செவ்வுக்குப் போனாற் கல்லூரியைக் காணலாம். (நாஞ்.).

க., ம. செவ்வு.

செவ்வே = 1. நன்றாக. “செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்’’ (திருவிருத். 98). 2. நேரே. “செவ்வே பாரிற் செல்கின்ற’’ (கம்பரா. முதற்போர். 216). ம. செவ்வே.

செவ் - செவ்வை = 1. செப்பம். அது செவ்வையான பாதை. (உ. வ.). 2. நேர்மை “தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி’’. 3. ஒழுங்கு. எல்லாம் செவ்வையாயிருக்கின்றன. (உ. வ.).