பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

நுணுங்குதல் = (செ.கு. வி.). பொடியாதல்.

(செ. குன்றாவி.) மெல்லப் பாடுதல். “அழகை யுடைத்தான பண்ணை நுணுங்கி” (திவ். திருநெடுந். 22 204).

நுளு - நுசு - நுசுப்பு = மகளிர் சிற்றிடை.

“நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை” (குறள். 1115).

ஒ.நோ.: உளு - உசு.

நுசு - நுசி - நொசி - நொசிவு = நுண்மை (தொல். உரி. 76).

நொசிதல் = 1. நுண்மையாதல். “நொசிமருங்குல்” (தொல். சொல். 368, இளம்பூ.). 2. குறைவுறுதல். “நொசிவிலாத பூசனை” (விநாயகபு. 36 37). 3. செயற்கு அருமையாதல். “நோற்றுணல் வாழ்க்கை நொசிதவத்தீர்” (சிலப். 19 223). 4. நைதல். “நொசித்த துகில்” (தொல். சொல். 330, உரை).

நுள் - நுறு - நூறு. நூறுதல் = 1. தூளாக்குதல். “அரண்பல நூறி” (அகம். 69). 2. துணித்தல். “யானை யருஞ்சமந் ததைய நூறி” (புறம். 93). 3. அழித்தல். “பழம்பகை தவ நூறுவா யென” (சீவக. 324). 4. இடித்தல் (பு. வெ. 6 26, உரை). 5. அறைதல். “முலைபொலி யாக முருப்ப நூறி” (புறம். 25). 6. நெரித்தல். “கரும்பினைக் கண்டகர நூறி” (நாலடி. 156).

. நூறுக., தெ. நூரு.

நூறு = 1. இடித்த அல்லது அரைத்த மா, பொடி, தூள். “நூறொடு குழீஇன கூவை” (மலைபடு. 137). 2. சுண்ணாம்பு. “கோடுசுடு நூற்றினர்” (மதுரைக். 401). ம. நூறு, து. நூத்ர. 3. நூறு என்ற எண் (பத்துப்பத்து). ம., தெ., க. நூறு.

நூறு எண்ண முடியாத துகள்களைக் கொண்டிருத்தலால், அதன் பெயர் பத்திற்கு மேற்பட்ட முதற் பேரெண்ணைக் குறித்தது.

நூறு - நீறு. ஒ.நோ.: நூன் - நீன் - நீ. தூண்டு - தீண்டு. தீண்டா விளக்கு = தூண்டா விளக்கு.

நீறு = 1. புழுதி. “அருவிதுக ளவிப்ப நீறடங்கு தெருவின்” (சிறுபாண். 200 - 1). 2. சாம்பல். “பொற்பாவாய் நீறாய் நிலத்து விளியரோ” (நாலடி. 266). 3. திருநீறு. “மந்திர மாவது நீறு” (தேவா. 857 1). 4. நீற்றின சுண்ணாம்பு (பிங்.).

ம. நீறு, தெ. நீரு.