பக்கம் எண் :

87

10

புல்4 (விரும்பற் கருத்துவேர்)

பொருந்தற் கருத்தினின்று மனம் பொருந்துதலாகிய விரும்பற் கருத்துத் தோன்றும்.

புல்லுதல் = நட்புச் செய்தல்.

புல் - புல்கு. புல்குதல் = நண்பராய் மருவுதல்.

புல் - புர் - புரி. புரிதல் = விரும்புதல்.

“புகுமுகம் புரிதல்”        (தொல். மெய்ப். 13)

புரித்தல் (பி.வி.) = விரும்பச் செய்தல்.

“புரித்த தெங்கிள நீரும்”    (சீவக. 2402)

புரி - வ. ப்ரீ - ப்ரிய, ப்ரீதி, ப்ரேம (முதலியன).

புரி - பரி. பரிதல் = 1. பற்றுவைத்தல். “பண்டம் பகர்வான் பரியான்” (பு. வெ. 12, ஒழிபு. 2). 2. சார்பாகப் பேசுதல். அவனுக்காகப் பரிய வேண்டா (உ.வ.). 3. காதல் கொள்ளுதல். “பாண பரிந்துரைக்க வேண்டுமோ” (ஐந். ஐம். 23). 4. இரங்குதல். “பாழாய்ப் பரிய விளிவது கொல்” (பு. வெ. 3 8). 5. வருந்துதல். “பழவினைப் பயனீ பரியல்” (மணிமே. 12 50). 6. வருந்திக் காத்தல். “பரியினு மாகாவாம் பாலல்ல” (குறள். 376). 7. அஞ்சுதல். “வடுப்பரியு நாணுடையான்” (குறள். 502).

பரி = 1. அன்பு (W.). 2. வருத்தம் (சூடா).

புல் - புள் - (புளு) - புகு - புகல், புகலுதல் = 1. விரும்புதல். “செருப்புகன் றெடுத்த” (திருமுருகு. 67). 2. மகிழ்தல். “முகம்புகல் முறைமையின்” (தொல். கற்பு. 11).

புகல் = 1. விருப்பம். “வானுறை புகறந்து” (பரிபா. 19 2. கொண்டாடுகை. “புகலகல் நின்மார்பின்” (கலித். 79).