பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

புரிகுழல் = கடை குழன்று சுருண்ட கூந்தல். “புரிகுழன் மாதர்” (சிலப். 14

புரிசடை = சுருண்ட சடை (W.).

புரிநூல் = முறுக்கிய பூணூால். “திருமார்பினிற் புரிநூலும்” (தேவா. 385 3).

புரிமணை = வைக்கோற்புரி வளையம்.

புரிமுகம் = 1. சங்கு. 2. நத்தை.

சங்குக் கூடும் நத்தைக் கூடும் உள் வளைவுள்ளன.

புரிமுறுக்கு = முறுக்கு வளையல்.

இடம்புரி = இடப்புறமாக வளைந்த சங்கு.

கொடும்புரி = மிக ஏறிய முறுக்கு.

முப்புரி = முறுக்கிய முந்நூல் (பூணூால்).

வலம்புரி = வலப்புறமாக வளைந்த சங்கு.

வைக்கோற்புரி = முறுக்கிய வைக்கோற் கயிறு.

புரி - புரிவு = 1. தப்பி நீங்குகை. “புரிவின்றி..... போற்றுவ போற்றி” (பு. வெ. 8 2. தவறு. “புரிவிலா மொழிவிதுரன்” (பாரத. சூது. 43). 3. வேறுபடுகை (அக. நி.).

புரி - புரிசை = நகரைச் சூழ்ந்த மதில்.

“ஏந்துகொடி யிறைப்புரிசை”     (புறம். 17).

புரி - பரி. பரிதல் = 1. (வளைந்து) முறிதல், “வெண்குடை கால்பரிந் துலறவும்” (புறம். 229). 2. அறுதல். “பரிந்த மாலை” (சீவக. 1349). 3. அழிதல். “பழவினை பரியுமன்றே” (சீவக. 1429). 4. பிரிதல் (W.).

பரித்தல் = சூழ்தல். “குருதி பரிப்ப” (அகம். 31). 2. அறுத்தல் (அக. நி.).

. பரி. பரி - . பரி.

‘‘Pari, ind. round, around, about, round about; fully, abundantly, richly (esp.) ibc. (where also pari) to express fullness (or high degree), R.V. & c. & c. as a prep. (with acc.) about (in space and time), R.V., A.V., against opposite to, in the direction of, towards, to, ib. (of. Pam. i, 4, 90; also at the beginning of a comp. mfn. cf. ib. ii, 2, 18, Vartt. 4 Fat. and Pary - adhyayana), beyond, more than, A.V., to the share of (with as or bhu, to