fall to a person’s lot.), Pam i, 4, 90, successively, severally (e.g. vriksham pari sincati, he waters tree after tree), ib; (with abl.) from, away from, out of, R.V.; A.V.; SBr. (cf. Pam, I, 4.93); outside of, except, Pam, 1,4,88, Kat. (often repeated, ib. viii, 1, 5; also at the beginning of or the end of am ind. Comp., ib. II, I, 12); after the lapse of Mu. III, 119; MBh. XIII, 4672 (some read parisamvatsarat); in consequence or on account or for the sake of, R.V.; A.V.; according to (esp. dharmanas pari, according to ordinance or in conformity with law or right), R.V.; (cf. Zd. pairi, Gk. pari)’’. - A Sanskrit English Dictionary by Sri Monier Monier Williams, p. 591 ‘‘peri, pref. = Gk. peri round, about, as: perianth, floral envelope; - carditis n., inflammation of - cardium; - cardium, membranous sac enclosing the heart, so - cardiac, - cardial, aa.; pericarp, seed-vessel, wall of ripened ovary of plant..........’’ - The Concise Oxford Dictionary பரிகலம் = 1. வட்டில், வட்டமான உண்கலம். “மலரயன் கொடுத்த பரிகல மிசையவே” (குற்றா. குற. 13). 2. தெய்வமும் உயர்ந்தோரும் உண்டெஞ்சிய மிச்சில். “வேதியச் சிறுவற்குப் பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி” (பதினொ. கோயினான். 40). பரிகை = 1. மதிலைச் சூழ்ந்த அகழி (திவா.). 2. மதிலுண் மேடை (பிங்.). தோன்றுமிப் பரிகை” (மேருமந். 1054). பரிகை - வ. பரிகா. பரிகம் = 1. மதில் (சூடா.). 2. அகழி. 3. மதிலுண் மேடை. பரிசு = வட்டமான கூடையோடம் (coracle). பரிசு - பரிசல் (coracle). பரி - பரிசை = 1. வட்டமான கேடகம் (புறம். 16, உரை). 2. வட்டமான விருது (W.). 3. கூடையோடம். பரி - பரிதி = 1. வட்ட வடிவு (திவா.). “பரிதி ஞாலத்து” (புறம். 174). 2. கதிரவன். “பரிதியஞ் செல்வன்” (மணிமே. 4 3. கதிரவனை அல்லது திங்களைச் சூழ்ந்த கோட்டை (பரிவேடம்) (பிங்.). “வளைந்து கொள்ளும் பரிதியை” (இரகு.இந்து.7). 4. தேருருளை. “அத்தேர்ப் பரிதி” (களவழி. 4). 5. சக்கரப் படைக்கலம். “பரிதியிற் றோட்டிய வேலைக் குண்டகழ்” (கல்லா. 80 23). 6. சகோடப்புள். “தண்கோட்டகம் பரிதியங் குடிங்கு கூடுமே” (இரகு. நாட்டுப். 40). 7. கோளின் தொலைக்கோண வளவு (epicycle). பரிதி காந்தம் = ஒருவகைக் கன்மணி (jasper), “பரிதி காந்தமென் றுரைத்திடு பன்னொரு சிகரத்து” (உபதேசகா. கைலை. 24) |