மணவாள முனிவர் (15 நூ) வே. பெ: | யதீந்திரப் பிரணவர். | ஊர்: | பாண்டிய நாட்டில் சிக்கல் கிடாரம். |
இவரே பெரிய ஜீயர் எனப்படுபவர். வைணவ சமயத்தில் தென்கலையாருக்குத் தலைவர். இவர் முதலில் அரசு சேவையில் அமர்ந்து துறவற நெறி நின்றவர். நூல் : | உபதேசரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதிபிரமேயசாரம், ஆர்த்திப்பிரபந்தம், கீதா தாத்பரிய தீபம், விரோதி பரிகாரம்,திருமந்திரார்த்த வியாக்கியானம். |
மணவைக் கூத்தன் (15 நூ) இவருடைய பெயர் ‘மணவையூருடையான் பூமாலைக் கூத்தன் பாண்டிப் பெருமாள்’ எனவும் காணப்பெறுகின்றது. சிறந்த புலவராக விளங்கிய இவர் தனிப்பாடல் இயற்றியதேயன்றி நூல்கள் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. மணி திருவேங்கட முதலியார் (20-நூ) நூல் : | நெல்லையப்ப முதலியார் என்பவர் பாடிய ‘சிவசாமிதேசிகர் தெரிசனமாலை, தோத்திர மாலை’ என்னும் நூலினைப் பாராட்டி வழங்கியசிறப்புப் பாயிரம். |
மணிவாசக சரணாலய அடிகள் (20 நூ) ஊர் : | சேதுநாட்டில் வேப்பங்குளம். | தாய் : | இலக்குமி அம்மாள்;தந்தை : சோணைமுத்து அம்பலகாரர்;கள்ளர்மரபு. |
இவருடைய பாட்டனார் சின்னைய தேசிகர் என்பவர் சிறந்த யோகியாகவும் ஞானியாகவும் விளங்கினார். அவரருளால் தோன்றிய இவர் இளமையில் ஆண்டவன் என்று பெயரிடப்
|