பக்கம் எண் :

11

பெற்றார். இளமைக் காலக் கல்விக்குப்பின் கொழும்பு, இரங்கூன் முதலிய இடங்களுக்குச் சென்று தனவைசியர் கடைகளில் அலுவல் புரிந்தார். பின்னர் வாசு தேவநல்லூர் மணிமுத்து ஓதுவார் என்பவரிடம் நன்னூல் முதலிய இலக்கண நூல்களையும், பெரிய புராணம் முதலிய இலக்கிய நூல்களையும், கற்றுத் தேர்ந்தார். தமிழாசிரியர்களுடன் தொடர்புகொண்டு தமது தமிழறிவைப் பெருக்கிக் கொண்டார்.

இவர் மணிவாசகரிடம் பேரன்பு கொண்டவர். நாள்தோறும் திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் பாராயணம் செய்யாது உணவருந்துவதில்லை என்பதை விரதமாகக் கொண்டிருந்தார்.கல்லல் என்ற ஊரில் மணிவாசகர் பெயரில் திருமடம் ஒன்று அமைத்து அதில் தங்கியிருந்தார்.கல்லலில் சோமசுந்தரப் பெருமானுக்கு நாட்டார்களின் உதவியுடன் அழகிய திருத்தேர்ஒன்று செய்தார். தமது ஐம்பதாவது வயதில் குன்றக்குடி மேலமடத்துத் தலைவர் கணபதிச்சாமி என்ற பெரியார்பால் சந்நியாசம் பெற்றுத் துறவறம் பூண்டு மணிவாசகசரணாலயர் என்றபெயர் பெற்றார். இவர் முருகக் கடவுளின் பால் பேரன்புகொண்டு அக்கடவுள் மீது பலவண்ணப் பாக்களையும், பதிகங்களையும் பாடியுள்ளார்.

நூல் :

திருப்பரங்குன்றப் பதிகம், திருச்செந்தூர்ப் பதிகம்,திருப்பழனிப்பதிகம், திருவேரகப் பதிகம், பழமுதிர்சோலைப் பதிகம், குன்று தோறாடற்பதிகம்,குன்றக் குடிப்பதிகம், குமரமலைப் பதிகம், விராலிமலைப் பதிகம், கொடுமளூர்ப்பதிகம், கழுகுமலைப் பதிகம், கதிர்காமமலைப் பதிகம், எட்டுக்குடிப் பதிகம்,திருச்சிக்கற் பதிகம், புள்ளிருக்கும் வேளூர்ப் பதிகம், திருத்தணிகாசலப் பதிகம்,செந்தமிழ் நாட்டுச் சிறப்பு, சேவகத் தேவர் பதிகம், தவம் பெற்றநாயகி பதிகம்,திருக்கண்ணிப் பதிகம், அழகிய நாயகி பதிகம், எக்கலா தேவி பதிகம், முருகக்கடவுள் விண்ணப்பம், அன்னபூரணி அட்டப் பிரபந்தம், முருகக்கடவுள் வண்ணம், இயன் மொழிவாழ்த்து.