பக்கம் எண் :

மத்தான் சாயிபு

மத்தான் சாயிபு (19 நூ)

வே. பெ:குணங்குடியார்.

இவர் திருச்சிராப்பள்ளியில் அத்தர் விற்பனை செய்து கொண்டிருந்தவர்: வாலையை வழிபட்டுச் சித்தர் நெறியில் நின்றவர்; இவர் பாடல்கள் தாயுமானவர் பாடல்கள் போன்று சிறப்புற்று விளங்குவன. ஐயாச்சாமி முதலியார் என்பவர் இவர் மீது ‘குணங்குடி நாதர் பதிற்றுப்பத்தந்தாதி’ என்றொரு நூல் இயற்றியுள்ளார்.

நூல் :

‘அகத்தீசர் சதகம்’ ‘நந்தீசர் சதகம்’ ‘கிறித்துமத கண்டன வச்சிரத் தண்டம்’. இவர் பாடிய பாடல்கள் ‘மத்தரன் சாயிபு பாடல்கள்’என்ற பெயரில் தொகுத்து வெளியிடப் பெற்றுள்ளன.

மதாறு சாகிப் புலவர் (19 நூ)

ஊர் :ஐயன் பேட்டை.
நூல் :மிகுறாசு நாமா, பறுலுமாலை.

மிகுறாசு நாமா என்னும் நூல் 234 செய்யுட்களைக் கொண்டது. இந்நூல் 1888-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது.

மதிவாணனார்                                            (சங்ககாலம்)

இவர் பாண்டிய அரசர்களுள் ஒருவர். கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர். நாடகத் தமிழ்நூல் இயற்றியவர். ‘மதிவாணர் நாடகத் தமிழ்நூல்’ புகழ்பெற்ற தாயினும்,மறைந்து போன தமிழ் நூல்களில் ஒன்றாகும். சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் அடியார்க்கு நல்லார், “கடைச்சங்க மிரீஇய பாண்டியருள்