கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்து இயன்ற மதிவாண நாடகத் தமிழ்நூல்” என்று குறிப்பிடுகின்றார்.எனவே, இது கடைச் சங்க காலத்து இயற்றப் பட்டநூல். அடியார்க்கு நல்லார் தமது உரையில் இந்நாடகத் தமிழ் நூலிலிருந்து சில நூற்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். நூல் : | மதிவாணனார் நாடகத் தமிழ்நூல். |
இந்நூல் மறைந்து போன தமிழ் நூல்களில் ஒன்று. மதுரகவி (19 நூ) இவர் சேதுநாட்டுப் புலவர்களுள் ஒருவர்; இசைப்பாடல்கள் பாடுவதில் வல்லவர்.சேது நாட்டமைச்சர் முத்திருளப்பப் பிள்ளையையும் சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியனையும் இசைப்பாடல்களால் புகழ்ந்து பாடியுள்ளார். சேது நாட்டை ஆட்சி புரிந்த மங்களேசுவரி ராணி என்னும் அம்மையாரைப் பாடி காக்கைகுளம் என்ற ஊரை நன்கொடையாகப் பெற்றுள்ளார். இசைப்பாடல்கள் பாடுவதில் சிறந்த புலமை பெற்றிருந்த கவிகுஞ்சரம் ஐயர் என்பவர் இவரிடம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நூல் : | கந்தபுராணக் கீர்த்தனை. |
மதுரகவி ஆழ்வார் (8 நூ) ஊர் : | திருக்குருகூருக்கு அண்மையிலுள்ள திருக்கோவிலூர்; அந்தணர். |
இவர் இளமையிலேயே வேத சாத்திரங்களைக் கற்றார், இனிமையான கவிகளைப் பாட வல்லவராதலின் மதுரகவி ஆழ்வார் என்று பெயர் பெற்றார். திவ்ய தேசங்களைச் சேவிக்க எண்ணி, வடநாட்டுத் திருப்பதிகளை அடைந்து அயோத்தியில் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் இரவில் தெற்கே அதிசய
|