பக்கம் எண் :

மதுரகவிகள்

ஒளி ஒன்று தோன்றியது. உடனே தெற்கே ஒரு முக்கிய நிகழ்ச்சி நடக்கவிருக்கிறதுஎன்று கருதித் திருக்குருகூரை அடைந்தார். அங்கு திருப்புளியின் கீழ் நம்மாழ்வார் எழுந்தருளியிருந்தார்.அவர் நிலையை அறிய விரும்பிய இவர், ‘செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்றுஎங்கே கிடக்கும்’ என்று கேட்டார். ‘அத்தைத்தின்று அங்கே கிடக்கும்’ என்று பதிலளித்தார்.இதனைக் கேட்ட மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரையே ஆசாரியராகக் கொண்டார். அவரும்இவரை அடிமை கொண்டு மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறிய யோகரகசிய உண்மைகளையும்எடுத்துக் கூறினர். பின்னர் இவர் அவர் புகழைப்பாடிச் சிலகாலம் வாழ்ந்து பரமபதம்அடைந்தார்.

நூல் :கண்ணி நுண் சிறுதாம்பூ. இது நம்மாழ்வார்தொடர்பான ஒரு பிரபந்தம்.

மதுரகவிகள் (19 நூ)

நூல் :

உடையான் என்பவன் தமக்குச் செய்ததீமையை நீக்கி உதவிய  ஆறாயிரம் என்பவனைப் புகழ்ந்து பாடிய தனிப்பாடல்.

மதுரக்கவிப் புலவர் (19 நூ)

வே. பெ. : சிதம்பர தத்துவலிங்கையன்.
நூல் :பொய்யா மொழியீசர் குறவஞ்சி.

மதுரகவி பாரதி (நூ 18)

வே. பெ. : கணபதி சுப்பையர்.
நூல் :பெருங்கரை.

இவர் மதுரை நகரில் தங்கியிருந்து அங்கயற் கண்ணியின் திருவருளால் இசைப்பாடல் பாடும் ஆற்றல் பெற்றார். சேதுபதியின் அமைச்சர் முத்திருளப்பப் பிள்ளை கடவுள் வழிபாட்டிற்காக மதுரைக்கு வந்தபோது அவர்மீது இவர்சில இசைப் பாடல்களைப் பாடினார். அவர் இவரைப் பாராட்டிப் பரிசளித்து மதுரகவி என்ற பட்டத்தையும் வழங்கினார். பின்னர் இவர் சிவகங்கைஇராமநாதபுரம் முதலிய இடங்களுக்குச் சென்று செல்வர்கள்மீதும் அரசர்கள்மீதும் இசைப் பாடல்கள் பாடிச் சிறப்புப் பெற்றுள்ளார்.

நூல் :மதுரகவிப் பதங்கள்.