பக்கம் எண் :

15

மதுரகவிராயர் 1 (18 நூ)

ஊர் :தொண்டை நாட்டில் அமரம் பேடு.

இவர் விரைவாகச் செய்யுள் இயற்றும் திறம் பெற்றவர்; செல்வர்கள் பால் சென்று பரிசு பெற்று வாழ்க்கை நடத்துவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். பிரம்பூர் ஆனந்த ரங்கம் பிள்ளையையும், காளத்தி முதலியாரையும் பாராட்டித் தனிப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

நூல் :திருக்கச்சூர் நொண்டி நாடகம்.

மதுரகவிராயர் 2 (19 நூ)

இவர் இராமநாதபுரம் முத்திருளப்ப சேதுபதியின் அவைக்களப் புலவராக விளங்கியவர்.

நூல் :பாம்பு கடித்துத் தாம் பிழைத்து வந்தது குறித்துப் பாடிய தனிப்பாடல்.

மதுரஞ்சுந்தர பாண்டியனார் ( )

வாழ்விடம்:மதுரை

இவர் தேவாரம் பாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்தார்.

நூல் :திருவருள்மாலை, முருகமணிமாலை.

மதுரமுத்துச் செட்டியார் (19 நூ)

ஊர் :வால சமுத்திரம்.
நூல் :

பழநியப்பக் கவிராயர் என்பவர் இயற்றிய ‘தோத்திரமாலை’ என்னும் நூலுக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம்.