மதுரை அழக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்(சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர்.இவர் பெயர் மதுரை அழக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்றும் காணப்படுகின்றது. அழக்கர் ஞாழல் என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்த ஒரு புலவரின் மகனாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். மள்ளர் என்பது வீரரைக் குறிக்கும். எனவே இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் சிறுகுடிகிழான் பண்ணனைப் பாடியவர். இப்பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனும் கோவூர்கிழாரும் பாடியுள்ளனர். ஆதலால் அவர்கள் காலத்தில் வாழ்ந்த புலவராவர். நூல்: | அகம் 33, 144, 174, 244, 314, 344, 353; குறுந்தொகை188, 215, நற்றிணை 82, 297, 321; புறம் 388. |
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (சங்ககாலம்) இவர் ஊராற் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர். இளவேட்டன் என்பது இவருடைய பெயர். மதுரையில் வாழ்ந்து அறுவை வாணிகம் செய்ததனால் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்று பெயர் பெற்றார். நூல் : | அகம் 56, 124, 230, 254, 272, 302; குறுந்தொகை 185; நற்றிணை 33,157, 221, 344; புறம் 329. |
|