பக்கம் எண் :

17

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்                   (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். கோடன் என்பது இவருடைய தந்தையையோ அல்லது இவருக்குரிய மற்றொரு பெயரையோ குறிக்கலாம்என்பர். ஆசிரியர் என்பதனால் கல்வி கற்பிக்கும் தொழிலை மேற்கொண்டவராவர்.

நூல் :குறுந்தொகை 144.

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்                    (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் பெயர் மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் என்றும் காணப்படுகிறது. முடத்தாமக் கண்ணியார், புல்லாளங் கண்ணியார் என்பதுபோல இவர் இளங்கண்ணியார் என்று அழைக்கப் பெற்றார். கௌசிகன் என்பது முனிவர் பெயராகும். எனவே, பெற்றோர் இவருக்கு இட்டபெயராகக் கொள்ளலாம்.

நூல் :புறம் 309.

மதுரை இளங்கௌசிகனார்                             (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் பற்றிய வரலாறு ஒன்றும் தெரியவில்லை.

நூல் :அகம் 381.