மணவாளதாசர் (17 நூ) பார்க்க : | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். |
மணவாள மாமுனிவர் (14 நூ) வே. பெ: | அழகிய மணவாளன், அழகிய மணவாள ஜீயர். | ஊர் : | ஆழ்வார் திருநகரி. | தந்தை : | திருநாவீருடைய பிரான் தாசரண்ணர். | பிறப்பு : | 1370. |
இவர் வைணவ ஆசாரியர்களில் ஒருவர். ஓம் எனும் மந்திரத்திற்கு ஒப்பானவர் என்று கருதப் பெறுகின்றார். வேதங்களையும், வேதாந்தங்களையும் மற்றுமுள்ள நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர். இல்லற வாழ்க்கையை ஏற்றவர். இவர் பிள்ளை லோகாசாரியாரின் மாணவர் திருவாய்மொழிப்பிள்ளை என்ற திருமலை ஆழ்வாரிடம் இரகசியப் பொருள்களையும், சம்பிரதாயப் பொருள்களையும் கேட்டறிந்தவர். இவர்தம் ஆசிரியரின் கட்டளைப்படி திருவரங்கத்தை அடைந்து தமது மாணவர்களுக்குத் திவ்யப்பிரபந்தத்தின் பெருமைகளை அருளிச்செய்தார். இறுதியில் இவர் துறவறம் பூண்டார். இவருடைய மாணவர்களில் எண்மர் தலைமைபெற்று அஷ்டதிக்கஜங்கள் என்று சிறப்புப் பெற்றனர். இவர் உரை நூல்கள் இயற்றுவதில் மிக்க திறமையுடையவர். வியாக்கியானங்களிலும் மிகுந்த திறமை காட்டியுள்ளார். திவ்விய சூக்திகளுக்கு அவதாரிகை இடுவது, பொருள் எழுதுவது, பொருள்களைத் திரட்டித் தருவது ஆகியவற்றில் மிக்க திறம் படைத்தவர். இவர் எவர்மனமும் புண்படாதபடி எழுதும் மரபினர். நூல் : | ஸ்ரீ வசன பூஷணம் உரை, தத்துவத்திரயம் உரை, முமூச்சுப்படிஉரை, ஆர்த்திப்பிரபந்தம், ஆசாரிய இருதய உரை, பெரியாழ்வார் திருமொழி உரை,இராமானுஜ நூற்றந்தாதி உரை, ஞானசாரம் உரை, பிரமேயசாரம் உரை, பகவத் கீதைக்குத்தாத்பரிய தீபம் என்ற உரை. |
|