பக்கம் எண் :

மண்ணிப்பங்கார்

செய்யுள் ஒன்று கூறுகின்றது. ஆனால் இப்போதுள்ள அச்சுநூலில் 1195செய்யுட்கள் உள்ளன. எனவே 70 செய்யுட்கள் இடைச்செருகல் ஆகலாம் என்று கருதப்பெறுகிறது.

ஸ்ரீபுராணம் :தீர்த்தங்கரர் வரலாற்றை விரித்துக் கூறுவது; மணிப்பிரவாளநடையில் அமைந்தது.

மண்ணிப்பங்கார் (19 நூ)

நூல் :தேசிக நூற்றந்தாதி.

மணக்குடவர் ( ? )

இவர் திருக்குறளுக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர்கள் பதின்மருள் ஒருவர்.மணக்குடி என்ற ஊரில் பிறந்து அவ்விடத்தில் வாழ்ந்ததால் மணக்குடியார் என்று வழங்கி அப்பெயரே மணக்குடவர் என்று மருவியதாகக் கருதுகின்றனர். தமிழகத்தில் மணக்குடி என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அவ்வூர்களில் இவர் எவ்வூரில் வாழ்ந்தார் என்று அறியமுடியவில்லை. மணக்குடி என்பது இவர் பிறந்தகுடிப்பெயர் என்று கருதுவாரும் உளர்.

திருக்குறள் உரையாசிரியர்களில் இவர் காலத்தால் முற்பட்டவர் என்றுஒரு கருத்து உள்ளது. ஆனால் இவர் தமது உரையில் பிறர் கொண்டபாடங்களையும் மற்ற உரைகளையும் குறிப்பிடுவதால் இவருக்கு முன்னும் உரையாசிரியர் சிலர் இருந்திருக்க வேண்டும் என்றுகருதமுடிகிறது. இளம்பூரணரே மணக்குடவர் என்பது டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் கருத்தாகும்.

நூல் :‘திருக்குறள் உரை’

திருக்குறள் உரைகளில் பரிமேலழகர் உரைக்கு அடுத்தபடியாக அச்சேறிய உரைமணக்குடவர் உரையாகும். இவ்வுரை தெள்ளிய தமிழில் எளிய நடையில் அமைந்துள்ளது. பொழிப்புரையும் சில இடங்களில் விளக்கமும் உள்ளன. இவர் பிற உரையாசிரியர்கள் போல வடநூல் கருத்துக்களைத் தமது உரையில் புகுத்துவதில்லை. புதிய பாடங்களைக் கொண்டு சொற்களைப் பிரிக்கும் முறையில் புதுமையைக் கையாண்டு உரை வரைந்துள்ளார்.