பக்கம் எண் :

7

மடண சிகாமணி (19 நூ)

வே. பெ:மதனசிகாமணி.
நூல்:பரத்தையர் மாலை,

இந்நூலுக்கு ‘மறைக்காட்டம்மன் மாலை’ என்ற பெயரும் உண்டு; விலைமாதர் மையலில் சிக்காதே என்பது நூலின் பொருளாகும்; 100 செய்யுட்கள் உள்ளன.

மடல் பாடிய மாதங்கீரனார் (சங்ககாலம்)

இவர் பாட்டு முதலியவற்றால் பெயர்பெற்ற சங்கப்புலவர்களுள் ஒருவர். இவர்பாடிய செய்யுட்களில் மடலேறுதல் குறித்துக் கூறியுள்ளமையால் இப்பெயர் பெற்றார்.

நூல் :குறுந்தொகை 182; நற்றிணை 337.

மண்டல புருடர் (16 நூ)

ஊர் :தொண்டை நாட்டில் வீரை; சைனர்.

இவர் ‘சூடாமணி நிகண்டு’ என்னும் நூலின் ஆசிரியர். திருமுனைப்பாடி நாட்டில் இருந்த சைன ஆசாரிய மடத்தில் தலைவராக வீற்றிருந்த குணபத்திரரைக் குறித்து ‘யதிதர்மம் ஸ்வாரக தர்மம்’ என்ற நூலில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அவர் வாழ்ந்ததாகக் கூறப் பெற்றுள்ளது. மேலும் சூடாமணி நிகண்டில் உள்ள செய்திகளைக் கொண்டும் இவர் கிருஷ்ணதேவராயர் காலமான 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவரென்றும் அறிஞர்கள்கருதுகின்றனர்.

நூல் :‘சூடாமணி நிகண்டு,’ ‘ஸ்ரீ புராணம்’.

சூடாமணி நிகண்டு:

இந்நூல் தெய்வத்தொகுதி முதல் பலபேர் கூட்டத் தொகுதி இறுதியாக 12தொகுதிகளை உடையது; திவாகரத்திற்கும் பிங்கலத்திற்கும் வழிநூலாக இருப்பது; இந்நிகண்டில்1125 செய்யுட்கள் உள்ளன என்று ஏடுகளில் காணப் பெறும் பழஞ்