பக்கம் எண் :

மச்சமுனி

மச்சமுனி ( )

இவர் சித்தர்களில் ஒருவர். மனிதத் தலையுடன் மீன்வடிவுமுடையவராக விளங்கினாரென்றும், காலங்கி மலையில் தவஞ்செய்தாரென்றும் போகமுனிவர், தம்முடைய மாணவர் புலிப்பாணி முனிவருக்குத் தெரிவிப்பதால் அறிகிறோம். இவர் பல மருத்துவ நூல்களை இயற்றியுள்ளதாகத்தெரிகிறது.

நூல்:

திருமந்திரம்-800, திராவகம் 800, வைத்தியம்800, குலாலபுராணம், கடைக் காண்டம் 80, கலை ஞானம் 800, நிகண்டு 300, பெருநூல் 800, சால காண்டம்முப்பு தீட்சைவிதி 80.

மச்சரேகைச் சித்தர் ( )

இவர் முகமதிய சமயத்தினர். இவருடைய பாடல்கள் மஸ்தான்பாடல்களைப் போன்றவை. வேதாந்த சித்தாந்த சமரச நன்னெறியைப் பின்பற்றியவர்.

நூல் :மச்சரேகைச் சித்தன் திருப்பாடல்.

மச்சுச் செட்டியார் (14 நூ)

ஊர் :சீர்காழி, சைவ வேளாளர்.

இவர் தருமபுர ஆதினத்தைச் சேர்ந்தவர்; உமாபதி சிவாச்சாரியாரிடம் அருளுரைபெற்றார். உலகைநோக்காது இறைவனை நோக்கியே இருத்தற் பொருட்டுத் தம் வீட்டு மாடியிலிருந்தமையால் மச்சுச் செட்டியார் என்ற பெயர் அமைந்தது.

ஞானபூசைத் திருவிருத்தம்.

மச்சேந்திரையர் ( )

நூல் :மச்சேந்திரர் ஞானக்களிப்பு.