 | ஆமதா பாத்தினிலே-சபர்மதி ஆற்றங் கரைதனிலே, சேமம் பெருகிடவே-அமைத்தார் சிறந்ததோர் ஆசிரமம். கல்வியைப் பெற்றிடலாம்-அங்கே கைத்தொழில் கற்றிடலாம். நல்ல குணங்களெல்லாம்-பெற்று நாட்டுக் குழைத்திடலாம். அண்ணனும் தம்பியும்போல்-பலர் அன்புடன் வாழ்ந்துவந்தார். நன்மைகள் செய்திடவே-அவர்கள் நாளும் பழகிவந்தார். நிலத்தை உழுதுவந்தார்-ராட்டை நித்தமும் சுற்றிவந்தார். பலப்பல கற்றவரும்-அங்கே பாமரர் போல்உழைத்தார். இந்தியப் பொருள்களையே-அவர் என்றும் பயன்படுத்தி | | |
|
|