பக்கம் எண் :

102

கொடிய சட்டம்
 

அந்நி யர்கள் இந்தி யாவை
     அடக்கி ஆண்டு வந்ததால்,
ஐயோ, நமது தேச மக்கள்
     அதிக துன்பப் பட்டனர்.
இந்தி யாவை அடைந்த உடனே
     இந்த நிலைமை மாறவே
எண்ணி எண்ணிப் பார்த்து காந்தி
     ஏற்ற வழிகள் தேடினர்.

*உலகப் போரில் எங்களுக்கே
     உதவி செய்தால் நிச்சயம்
உரிமை பலவும் தருவோம், என்றே
     உரைத்தார் வெள்ளைக் காரர்கள்.

* முதலாவது உலகப் போர்.