பக்கம் எண் :

104

தொல்லை கொடுக்கும் சட்டம் ஒன்றைத்
     துரித மாகப் போட்டனர்.
சுதந்தி ரத்தைப் பற்றி ஏதும்
     சொல்லக் கூடா தென்றனர்.

கூட்டம் போட்டுப் பேசி னாலே
     குற்றம் என்று கூறினர்.
குறைகள் எடுத்துச் சொல்லு வோரைக்
     கொடிய சிறையில் தள்ளினர்.
சாட்சி இன்றிக் கேள்வி இன்றித்
     தரும நியாயம் இன்றியே,
தண்ட னைவி திக்க அந்தச்
     சட்டம் உதவி செய்ததே.

“மிகவும் மோச மான சட்டம்
     வெள்ளைக் காரர் போட்டது.
வீரத் துடனே அதை எதிர்த்தால்
     வெற்றி நமக்கு நிச்சயம்.
அகிம்சை என்னும் ஆயு தத்தால்
     அடைவோம், அந்த வெற்றியை.
ஆண்மை யோடு வருக! வருக!”
     என்ற ழைத்தார் காந்தியும்.