பக்கம் எண் :

105

“நன்றி கெட்ட ஆங்கி லேயர்
     இன்னும் இங்கி ருப்பதோ?
நாட்டை விட்டே அவர்கள் தம்மை
     ஓட்ட வேண்டும் விரைவிலே.”
என்று துடித்தே இளைஞர் பலரும்
     எரிம லைபோல் குமுறினர்.
இந்தச் சமயம் நாடு முழுதும்
     காந்தி சுற்றி வந்தனர்.