பக்கம் எண் :

107

அகிம்சை முறையிலே தேசமெங்கும்
     ஹர்த்தால் நடத்திட வேண்டுமென்றே
மிகவும் கவனமாய் காந்திமகான்
     வேண்டுகோள் ஒன்றை விடுத்தனரே.

அண்ணல் குறித்த தேதியிலே
     ஹர்த்தால் நடந்தது தேசமெங்கும்.
சின்னஞ் சிறிய ஊர்களிலும்
     திறமையாய் ஹர்த்தால் நடந்ததுவாம்.

எந்தக் கடையும் திறக்கவில்லை.
     எவருமே வேலைக்குச் செல்லவில்லை.
“இந்தியர் அனைவரும் ஒன்றுபட்டார்”
     என்ப துணர்ந்தனர் வெள்ளையர்கள்.