பக்கம் எண் :

108


 

படுகொலை
 

நாட்டில் அமைதியாய் ஹர்த்தாலுமே
     நடந்ததே. ஆயினும், வெள்ளையர்கள்
கூட்டங்கள் யாவும் தடுத்தனராம்.
     குண்டாந் தடியால் அடித்தனராம்.

அடக்கு முறையை எதிர்த்திடவே
     அமிர்த சரஸ்என்னும் நகரினிலே
படையென மக்கள் திரண்டனராம்.
     பயமின்றி ஊர்வலம் சென்றனராம்.