பக்கம் எண் :

109

நாலு புறமும் சுவர்கள் உள்ள
     நடுவிலே சிறியதோர் வாசலுள்ள
‘ஜாலியன் வாலா பாக்’ எனும்ஓர்
     சதுக்கத்தில் கூடியே பேசினராம்.
 

அந்தச் சதுக்கத்து வாசலிலே
     ஆங்கில ஜெனரல் டயர்என்பான்,
எந்திரத் துப்பாக்கி கொண்டுவந்தான்;
     இரக்கமில் லாமலே சுட்டுவிட்டான்!