ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் அலற அலறவே சுட்டுவிட்டான்! நானூறு பேர்களைக் கொன்றுவிட்டான்! நமனையும் அங்கே மிஞ்சிவிட்டான்! இந்தக் கொடுமையைக் கேட்டதுமே இரத்தம் கொதித்தது மக்களுக்கே. வெந்தது காந்தியின் உள்ளமுமே, வேதனைத் தீயுமே சுட்டதனால்!