பக்கம் எண் :

111

ஒத்துழையாமை
 

ஒத்துழை யாமை இயக்கத்தினை
     உடனேநம் காந்தி துவக்கினராம்.
எத்தனை யோபேர்கள் ஒத்துழைத்தார்,
     இனிய தலைவராம் காந்தியுடன்.

பட்டம் பதவி துறந்தனராம்.
     பள்ளியை மாணவர் விட்டனராம்.
சட்ட சபைக்குமே போகாமல்
     தியாகங்கள் பற்பல செய்தனராம்.

அடக்கு முறையை எதிர்த்தனராம்.
     அந்நியத் துணியைக் கொளுத்தினராம்.
தடைகளை யெல்லாம் மீறினராம்.
     சாந்த வழியிலே சென்றனராம்.