வீதியில் சாதுவாய்ச் சென்றவரை வேட்டை யாடவந்தார் சேவகர்கள். பாதி வழியில் தடுத்தனரே. ‘பட்பட்’ டெனவுமே சுட்டனரே. ஆவேசங் கொண்டனர் மக்களெல்லாம். ஆத்திரத் தோடு கிளம்பினரே. சேவகர் தங்கும் நிலையத்தையே தீயிட்டுக் கொளுத்தினர் கோபத்திலே. இருபத்தி ரண்டு சேவகர்கள் எரிந்துமே சாம்பல் ஆயினரே. வெறியிலே மக்கள் கொளுத்திவிட்டார்! மிகமிக வேதனை காந்தியுற்றார். “அன்பு வழியிலே போர்புரிய ஐயோ, என் மக்கள் அறியவில்லை. இன்னமும் பக்குவம் அடையவில்லை என்பதை நானும் உணர்ந்துகொண்டேன். பக்குவம் ஆகாத மக்களைநான் பங்கு கொள்ளச் செய்தேன்; ஆதலினால் மக்களை மக்களே கொல்லும்நிலை வந்ததே! ஐயோஎன் குற்றம்” என்றார். |