பக்கம் எண் :

117

உள்ளம் தடுமாறச் செய்துவரும்
     உடல்நலம் தன்னைக் கெடுத்துவரும்
கள்ளுக் கடைகளை மூடுதற்கே
     காந்தி மறியல் துவக்கினரே.
     ஃ      ஃ      ஃ

“அந்நியர் நம்மை அடிமையென்றால்
     ஆத்திரப் பட்டே எதிர்த்திடும்நாம்
இந்திய மக்களில் ஹரிஜனரை
     ஏனோ அடிமையாய் எண்ணுகின்றோம்.

ஆண்டவன் படைத்த குழந்தைகள்நாம்
     அனைவரும் சமம்என எண்ணிடுவோம்?
தீண்டத் தகாதவர் யாருமில்லை.
     சேர்ந்துநாம் வாழ்வோம்” எனஉரைத்தார்.

தாயில்லாக் குழந்தைகள் போல்மிகவும்
     தவித்த ஹரிஜன மக்களுமே,
கோயிலில் சென்று தடைகளின்றிக்
     கும்பிடச் செய்தனர் காந்தியுமே.