பக்கம் எண் :

118

“ராட்டையில் தினமுமே நூற்றிடுவோம்.
     நல்ல கதர்உடை கட்டிடுவோம்.
நாட்டினில் பஞ்சம் போக்கிடுவோம்.
     நம்மவர் துயரம் தீர்த்திடுவோம்.

சொந்தநம் நாட்டுச் சகோதரர்கள்
     சோற்றுக் கில்லாமல் தவிக்கையிலே,
அந்நிய நாட்டுத் துணிகளையே
     அணிவது பாபம்” எனஉரைத்தார்.

கண்போல் கதரைக் கருதிவந்தார்;
     கைராட்டை யால்தினம் நூற்றுவந்தார்.
உண்ணா விரதம் இருக்கையிலும்
     ஒருநாளும் நூற்கா திருந்ததில்லை.